150 ஆண்டுகள் கடந்த ‘வந்தே மாதரம்’ பாடல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியாம்; ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு.
இதுபோல் அரசுக்கு சம்பந்தமில்லாமல் ஆளுநர் ஒருவர் தனியாக ஆணையிடுவதோ, சுற்றறிக்கை விடுவதோ சரியானதுதானா? நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசே தவிர, ஆளுநர், ஆட்சி அல்ல; அத்துமீறுகிறார், ஆளுநர் ரவி!
ஆர்.நல்லகண்ணு
நூறு வயது கடந்த மூத்த பொதுவுடைமை கட்சித் தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிப்பு காரணமாக நேற்று (14.12.2025) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் சீரானவுடன், மாலையே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
மூன்று பேர் கைது
சென்னை மெரினாவில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள மெட்ரோ கட்டுமானப் பொருட்கள் திருட்டு. வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர் கைது.
அனுமதிக்கமாட்டோம்!
உத்தரப்பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், எஸ்அய்ஆர் நடைமுறை மூலம் வெற்றி பெற பிஜேபி துடிக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் கூறியுள்ளார்.
