மதுரை, டிச.11- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு 9.12.2025 அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசு வழக்குரைஞர்களிடம் பேசும்போது (தேவாலயங்களில் கிறிஸ்தவப் பாதிரி மார்களைப் போல்). நான் இங்கு கைகளை விரித்து, ‘ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது’ என்று கூற வரவில்லை. எனவே, தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் தரப்பில் பதிலளிக்க வேண்டும். விசாரணை டிச. 17க்கு தள்ளிவைக்கப்படுகிறது. என்று உத்தரவிட்டுள்ளார்.
