டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* என் வாக்குச்சாவடி; வெற்றிச் சாவடி என்ற முழக்கத்தோடு, இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பூத் வாரியாக தொண்டர்களுடன் ஆலோசனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆசிரியர் தகுதித் தேர்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்தியா முழுமைக்கும் விலக்கு அளித்திட ஆசிரியர் அமைப்புகள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், நாடாளுமன்ற குழுவின் முன் கபில் சிபல் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் மாடல்: குஜராத்தின் அண்மைக்கால கல்வி புள்ளிவிவரங்கள், குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தொடரும் இடைநிற்றல் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கியுள்ள ஒரு கல்வி அமைப்பை வெளிப்படுத்துகின்றன என நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.
தி இந்து:
* கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கீதை பாராயண நிகழ்ச்சியில் புலால் உணவு விற்ற வியாபாரிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஒரு அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
* திருப்பரங்குன்றம் சர்ச்சை ஏற்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடத்தை குறித்து இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதினர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்களவையில் “தேர்தல் சீர்திருத்தங்கள்” மீதான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி “தற்காப்புத் தன்மை கொண்டது” என்று வர்ணித்தார். எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை என ராகுல் கண்டனம்.
– குடந்தை கருணா
