புதிய ஆவணங்கள் அறிவிப்பு
புதுடில்லி, டிச.11 ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்டாலும், அது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதில் முகவரி விவரங்கள் இருப்பதில்லை. மேலும், ஆதார் அட்டை பெயர் மாற்றத்திற்கான ஆவணங்களை மிகவும் நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது. இதனால், பான் கார்டு இனி ஆதார் பெயர் மாற்றத்திற்குப் போதுமான ஆவணமாகக் கருதப்படாது.
ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், இனிமேல் வலுவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் பெயர் மாற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் முக்கிய ஆவணங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பாஸ்போர்ட் மக்களின் பிறப்புச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ் / டி.சி கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றிய/மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை திருமணச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்/மருத்துவமனையின் எழுத்துப்பூர்வ சான்றிதழ் ஆதார் விவரங்களை மாற்றும்போது, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணமானது உங்களின் தற்போதைய பெயர் (New Name) மற்றும் ஒளிப்படம் ஆகிய இரண்டையும் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும்.
