பெரியார் உலகத்திற்கு ரூ.20 இலட்சம் வழங்க முடிவு!
டிசம்பர் 16இல் உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு!
கல்லக்குறிச்சி, டிச. 10- கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.12.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் துணைத் தலைவர் குழ.செல்வராசு வர வேற்புரையாற்றினார்.
கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் முன்னிலை வகித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு. இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட கழகச்செயலாளர் ச. சுந்தர்ராஜன் மாவட்ட துணைச் செயலாளர் பா.முத்து,
மாவட்ட ப.க.தலைவர்பெ.எழிலரசன், செயலாளர் வீர.முருகேசன் அமைப்பாளர் சி.முருகன், ப.க.ஆசிரியரணி தலைவர்கோ.வேல்முருகன் திராவிட இயக்கதமிழர்பேரவை பொறுப்பாளர் இராசேந்திரன் ஊராங்கனி மா.ஏழுமலை மேலூர் கி.முத்துவேல், என்.சேகர், மாயக்கண்ணன், கே.கோகுல் இளைஞரணி எம்.முனியன் கொட்டையூர் பழனி, ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தீர்மானங்கள்:
இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிடமாடல்ஆட்சி என்ற தொடர் பரப்புரை கூட்டத்தில் சிறப்புரையாற்ற டிச. 16 உளுந்தூர்பேட்டைக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனதீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் என்ற பெரும் பணியாக சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.20-இலட்சம் மாவட்டக்கழகம் சார்பில் வழங்குவது என தீர் மானிக்கப்பட்டது.
பெரியார் உலக நிதி திரட்டல் குழு அமைக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள்: மருத்துவர்-கோ.சா.குமார் (மாநில செயலாளர் பெரியார் மருத்துவரணி) ச.சுந்தர்ராசன் (மாவட்டச் செயலாளர்)
தலைவர்: வழக்குரைஞர் கோ. சா.பாஸ்கர் (மாவட்டதலைவர்),
செயலாளர்: குழ.செல்வராசு (மாவட்டதுணைத்தலைவர்)
பொருளாளர்:முனைவர் ம.சுப்பராயன் (கழக காப்பாளர்)
துணைத் தலைவர்: பா.முத்து (மாவட்டதுணைச்செயலாளர்)
உறுப்பினர்கள்: பெ. எழில ரசன் (மாவட்ட ப.க.தலைவர்), வீர.முருகேசன் (மாவட்ட ப.க.செயலாளர்), சி.முருகன் (மாவட்ட ப..க. அமைப்பாளர்), கோ.வேல்முருகன், பழனியம் மாள் கூத்தன் (கழக மகளிர் அணித் தலைவர்), மா.ஏழுமலை கழக இளைஞரணி, நகர தலைவர் இரா.முத்துச்சாமி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
மாவட்டத்தலைவர் வழக்கு ரைஞர் கோ.சா.பாஸ்கரன் தமது சார்பில் ரூ.5-இலட்சம் நன்கொடை பெற்றுத் தருவதாக வும் தெரிவித்தார். கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் ரூ.1-இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
கொட்டையூர் இராசேந்திரன், கோ.வேல்முருகன், உலகிய நல்லூர் த.இராசேந்திரன் ஆகி யோர் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கி சிறப்பித்தார்கள்.
