மங்களூரு, டிச.9 கருநாடகத்தில் ஹாவேரி மாவட்டம், அக்கியலூர் சி.ஜி.பெல்லாட் அரசு கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர், தலையை மறைக்கும் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிந்துவந்தார். அதைக் கண்டித்து ஹிந்து அமைப்பினர் அம்மாணவிக்கு காவித் துண்டு கொடுத்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு அடாவடி யில் இறங்கியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு கருநாடக மங்களூரு அரசுக் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி தலையை மறைக்கும் ஆடையை அணிவதை எதிர்த்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போதையை பாஜக அரசும் அதற்கு ஆதரவு அளித்தது. இதனாலேயே கருநாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பறிகொடுத்தது.
இந்த நிலையில் கருநாடகாவில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு இப்போதே மதவாதப் பிளவு நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.
கைப்பேசி தடைக்கு
எதிர்ப்பு!
காவித் துண்டு அணிந்துள்ள மாண வர்களின் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி, கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கல்லூரியில் கைப்பேசி சோதனை நடத்தப்பட்டது இதற்கும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விரேஷ் கும்மூர் கூறுகையில், ‘‘ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் கல்லூரிச் சீருடையில்தான் உள்ளனர். இருப்பினும் ஹிந்து அமைப்பினர் காவித் துண்டுகளை அணியவைத்து போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுகின்றனர்.
அனைத்து ஆசிரியர்களுடனும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுடன் விவாதித்த பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
கல்வி வளாகத்தில், மாண வர்க ளிடையே பிளவையும், வெறுப்பையும் விதைக்கும் இது போன்ற நடவடிக்கைகளும், அர சியல் சார்ந்த தலையீடுகளும் மிகவும் கண்டிக்கத்தக்கவை. கல்வி என்பது அனைவருக்குமானது. இங்கு மத ரீதி யான பிரிவினைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
சகோதரத்துவத்தைக் குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து, ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும். நமது குழந்தைகளுக்கு நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கருநாடக கல்வி ஆர்வலர்கள் கவலையோடு கோரிக்கை விடுத்துள்ள னர்.
