வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் நூறாவது நாள் விழா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வெட்டிக்காடு, டிச. 8- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்த கல்வியாண்டிற் கான (2025-2026) மழலையர் நூறாவது நாள் விழா கொண்டாட்டம் அனைத்து பெற்றோர்களையும் வரவழைத்து சரியாக 28.11.2025 அன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது.

விழாவில் மழலையர் பிரிவு யு.கே.ஜி. மாணவி தர்ஷினி வரவேற்புரை நல்க தமிழ்மொழி வாழ்த்துடன் விழா பெருமிதத்துடன் தொடங்கியது. மாணவர்கள் இந்த நூறு நாள் களில் தமது நிறுவனத்தில் என்ன பயின்றுள்ளார்கள் என்பதனை தெளிவாகவும் நேர்த்தியுடனும் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் நின்று செய்து காட்டினார்.

நிகழ்ச்சியில் யுகேஜி மாணவி தன்விகா  திருக்குறளில் இரண்டு அதிகாரத்திற்கான 20 குரள்களை தெளிவாக கூறினார். தமிழ் எழுத்துக்கள் அதற்குரிய வார்த்தைகள், பாடல்கள், கதைகள், அறுசுவைகள், அடுக்குத்தொடர்கள், அவ்வை பாட்டியின் அறிவுரைகள், ஆங்கில எழுத்துக்கள் – அதற் குரிய வார்த்தைகள், ஆங்கில உரையாடல், கதை பாடல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் எதிர்ப் பதம், Sight Words, Prepositions, Articles, ஒருமை பன்மை, கணித சம்பந்தமான குறியீடுகள், ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண்கள் 1 முதல் 50 வரை, கணித வடிவங்கள்,  100, 200 முதல் 1000 வரை எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எடுத்துரைத்தனர். கூட்டல் கழித்தல் கணக்குகளை கை விரல்கள் மூலம் செய்து காட்டினர்

காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் அவற்றின் பயன்கள், பறவைகள், பூக்கள் காய்கள் கனிகள் ஆகியவற்றின் பெயர்களையும், அவற்றில் உள்ள சத்துக்களையும், பள்ளிகள் மூலம்  குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் புதுவிதமான செயல்முறைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றை எடுத்துக் கூறினர். பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை ‘எங்கள் பள்ளி’ மூலம் யுகேஜி மாணவர்கள் வியன் மற்றும் ரக்சன் தெளிவாக விளக்கினர். நமது தேசிய பழம் மாம்பழம் என்பதனை எடுத்துக்கூறி அத னுடைய சத்துக்களை யுகேஜி மாணவர்கள் லக்சன்  மற்றும் சுதர்ஷினி ஆகியோர் விளக்கினர்.

பெற்றோர்கள் அனைவரும் தமது குழந்தைகள் மேடையில் நின்று தான் பயின்றவற்றை கூறும் பொழுது மிகவும் முகமகிழ்ச்சியோடு கண்டு ரசித்த தோடு ஆசிரிய பெருமக்களையும் முதல்வரையும், கண்காணிக்கும் ஆயாக்களையும், வாகன ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை மனமுவந்து பாராட்டினர்.

யுகேஜி மாணவன் ஷியா மளன்  நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே  மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *