திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதா?

நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேட்டி!

புதுடில்லி,டிச.6– திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே! அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? என்றார் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலை வர் கனிமொழி எம்.பி. அவர்கள் நேற்று (5.12.2025) டில்லியில் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டு களாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவிற்கும் சென்று வழி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோ தத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவை யில்லாமல் சிலர் பிரச்சினைகளை உரு வாக்குகின்றனர்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் தமிழ்நாடு அரசு சரியாகச் செய்து கொண்டிருக்கிறது. கார்த்திகைத் தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோவில் நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து கார்த்திகைத் தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோவிலில் ஏற்றி கொண்டிருந்தார்கள். கோவில் மலைமீது கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுகிறது.

கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதா?

ஆனால் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட ‘நில அளவைக்கல்’ (சர்வே ஸ்டோன்) மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்து மதத்திற்கு எதிராக இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரச்சி னைகளை உருவாக்குகின்றனர்.

ஏற்கெனவே  இந்த விசயத்தில் நீதி மன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்பொழுது நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.

தமிழ்நாடு காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல்படையைத் தீபம் ஏற்றுவோருக்குத் துணையாக அனுப்பி வைக்கிறார். இதை பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க. மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாக மாற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரி கிறது. அவர்களே இதை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சி னையை எழுப்பிய பொழுது, அமைச்சர் கிரண் ரிஜூஜு மூத்த உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களைப் பார்த்து, நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நேரமில்லா நேரம் என்பது உறுப்பி னர்களின் நேரம். அவர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைக்கக் கூடிய நேரம். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தேவையில்லாமல் மிக நீண்டதொரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரும் பல பொய்ப் பிரச்சாரங்களை முன்வைத்தார்.

தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் காழ்ப்புணர்வை உரு வாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவர் பேசினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்:

தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநி லத்திலும் இது போன்ற பிரச்சினைகளைக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அப்படியொரு பிரச்சினையைக் கொண்டு வந்து மதக்கலவரத்தை உண்டாக்குவதுதான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம். பிரச்சி னையை உருவாக்கி, அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்.

அவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமிழர்களாக தங்களை முதலில் உணர்ந்தவர்கள். யார் தங்களுக்காக பாடு படுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஆபத்தில் தள்ள நினைக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள். இப்படியான பிரச்சனைகளை உருவாக்குவது எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுக்குப் பயன்படாது.

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியபோது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எங்களோடு நின்றார்கள்.

இந்தத் தீர்ப்பு ஒரு தவறான முன்னு தாரணம், இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன.

தமிழ்நாடு அரசு பல கோவில்களில் குடமுழுக்கு நடத்துகிறது, விழாக்களை நடத்துகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு அனைத்து வசதிகளையும் அற நிலையத்துறை செய்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்பிருந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் தற்போது நடக்கின்றன.

மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும், பக்தர்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் நாங்கள் இல்லை. பக்தர்களுக்குப் பாது காப்பு இல்லாத சூழலை உருவாக்கி அரசியல் குளிர்காய்வதற்காக பாஜகவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள், அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எல்.முருகன் பொய்க் குற்றச்சாட்டு

அமைச்சர் எல்.முருகன் பேசும்போது இந்துக்களை திருப்பரங்குன்றத்துக்குள் அனுமதிக்கவில்லை என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். எந்தக் காலத்தில் இந்துக்கள் திருப்ப ரங்குன்றத்துக்குப் போக முடியாத சூழ்நிலை இருந்தது? திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போகும் இந்துக்கள், தர்காவிற்கும் சென்று வழிபட்டு வரும் இணக்கமான சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இன்று யாரும் போக முடியாத சூழலை பாஜக தான் உருவாக்கியிருக்கிறது.

ஆகமவிதிகள் என்று பேசக்கூடியவர்கள் அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டிப் புதைக்க கூடிய வகையில் தீபத் திருநாள் முடிந்த அடுத்த நாள் தீபத்தை ஏற்றுவது என்பது ஆகம விதிகளின்மீது நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய இந்துக்களின் மன தைப் புண்படுத்தக்கூடியது.

யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. அப்படி எங்கள் மீது பழி சுமத்துபவர்கள்தான் உண்மையில் மக்களைப் புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ் நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாக இருக்கிறது. பாஜக, ஆட்சி செய்யும் ஓர் இடத்திலாவது மத நல்லிணக்கமும் அமைதியும் இருக்கிறதா? யாரால் அங்கு மதப் பிரச்சினைகள் உருவாகிறது? அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாத, மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கித் தந்திருக்கிறது. அதைக் குலைக்கத்தான் பாஜக பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *