கன்னியாகுமரி, நவ.26–24.11.2023 அன்று காலை முதல் மாலை வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி உற்சாகமாக நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசே கரன், மாவட்டத் தலைவர்
மா.மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் ஆரல்வாய் மொழியில் தொடங்கி னார்கள்.
மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா மணி ஒன்று,
மாவட்டக் கழக துணைத் தலைவர் வடசேரி ச.நல்ல பெரு மாள் _ -சாந்தி இணையர்கள் உண்மை சந்தா,
வெள்ளமடம் அகத்தியர் முனி குழந்தைகள் மருத்துவமனை பாதர் லியோன் சென்சன் ஓராண்டு,
திமுக தொழிற்சங்கத் தலைவர் கண்ணன் புதூர் வ.இளங்கோ ஓன்று,
கோட்டாறு கழக தலைவர் மணிமேகலை ஒன்று,
மாவட்ட இளைஞரணி தலை வர் அய்க்கியபுரம் எஸ்.அலெக்ஸ் சாண்டர் ஒன்று,
காப்பாளர் திட்டுவிளை ஞா.பிரான்சிஸ்ஓராண்டு,
திட்டுவிளை வணிகர் தி.சீலன் உண்மை சந்தா,
திமுக பேச்சாளர் திட்டுவிளை கோ.சி.சுந்தர் ஒன்று,
பெரியார்பெருந்தொண்டர் தக்கலை எஸ்.கெ.அகமது ஓராண்டு,
காப்பாளர் மிடாலம் அம்மை யார்சி.கிருட்டினேசுவரிஒன்று,
மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், தி.மு.க. பகுத்தறிவு கலை இலக்கிய துறையின் துணைத் தலைவருமான உ.சிவதானு ஆகி யோர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள். தொடர்ந்து சந் தாக்கள் திரட்டும் பணியில் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.