கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.12.2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சட்டமன்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து திமுக குழு அமைத்து முடிவெடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புக்குப் பின் செல்வப் பெருந்தகை தகவல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேர்தல் சிறப்புத் திருத்தம் எனும் பெயரில் ஆட்சியைக் கவிழ்க்க அமித்ஷா சதி என மம்தா குற்றச்சாட்டு.

* ஸ்மார்ட்போன்களில் முன்கூட்டியே நிறுவ வேண்டுமென்ற சஞ்சார் சாத்தி செயலி உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு

* மேற்குவங்கத்தில் 32,000 ஆசிரியர்கள் நீக்கிய (டிஸ்மிஸ்) உத்தரவு ரத்து: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காந்தியாருக்கும் கேரள சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீகத் தலைவருமான நாராயண குருவுக்கும் இடையிலான சந்திப்பின் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தட்சிண கன்னடப் பகுதியில் நடைபெற்றது. முதலமைச்சர் சித்தராமையாவின் கரத்தை வலுப்படுத்த ஏஅய்சிசி தலைவரும் கருநாடக எம்எல்சியுமான பி கே ஹரிபிரசாத் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

* நாடாளுமன்ற வளாகத்தில் புதிய 4 தொழிலாளர் சட்டங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்: கார்கே, சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கல்வியாண்டில் எட்டு லட்சம் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேறினர், இதில் 3.7 லட்சம் பெண்கள்: இடம்பெயர்வு, குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை, குழந்தைகள் மீது வீட்டுப் பொறுப்புகளை சுமத்துதல் ஆகியவை காரணங்கள் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் மாநிலங்களவையில் பதில்.

தி இந்து:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு கேள்விக்கு ஒன்றிய அரசின் பதிலால் ராகுல் காந்தி அதிருப்தி: உறுதியான கட்டமைப்பு, காலக்கெடு திட்டம், நாடாளுமன்றத்தில், பொதுமக்களுடன் உரையாடல் இல்லை. பல மாநிலங்களில் வெற்றிகரமான ஜாதி கணக்கெடுப்புகளின் உத்திகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் அரசும் விரும்பவில்லை; வெளிப்படையான துரோகம் என கருத்து

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *