நூற்றுக்கால் நூற்றாண்டு காணும்
ஏற்றமிகு எம் தலைவா!
நாற்றுக்கால் போல்எமைக் காத்த
எங்கள் உழவர் ஏறே!
வேற்றுக்கால் வேதக் கால்
வீழாதீர் அக்காலில் எனக்கூறி
விழிப்படையச் செய்த வேந்தே!
ஊற்றுக்கா லாகி எமை எந்நாளும்
உழைக்க வைத்த பகுத்தறிவுச் சுழலே!
உலகறிந்த தொண்டறமே!
உடல் பொருள் உயிரனைத்தும்
மக்களுக்கே உவந்தளித்த ஈகையின் எல்லையே!
ஈரோட்டுப் பாதையே எம் பாதை;
என்றென்றும்
ஈரோட்டுப் பாதையே என் பாதை!
வாழி வாழி!
– கி.வீரமணி
‘விடுதலை’ 17.9.2003
