“உலகம் சுவாசிக்கும்
நுரையீரல்கள் – மரங்கள்
காடுகளை பிரவிக்கும்
கருவறைகள் – மரங்கள்”
என்ற கவிதைக்கேற்ப, ஜெயங்கொண்டம் நகராட்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளிக்கு 100 மகோகனி மரக்கன்றுகளை வழங்கினர். நகராட்சித் தூய்மைப் பணியாளர்களும், பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் தரத்தை மேம்படுத்தவும்., மழை பெறுவதும் நோக்கமாகக் கொண்டு இச்செயல்பாட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.
