பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அருப்புக்கோட்டை புலவர் வை.கண்ணையன் இணையர் இலக்குமி அம்மாள் நேற்று (29.11.2025) இன்று காலை 7 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நாளை (30.11.2025) காலை 8 மணியளவில் அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு எழிலகத்தில் நடைபெறும். அன்னாரது மறைவுக்கு விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு : க.எழிலன் – 9868784851
– – – – –

அசோக்லேலன்ட் திராவிடர்தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும், சோழிங்கநல்லூர் திராவிடர் கழகத்தின் மூத்த தோழருமான ஜி.வெற்றிவீரன் இன்று (29.11.2025) காலை 7 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இணையர் இந்திரா, மகன்கள் தென்னரசு, இளமாறன் மற்றும் குடும்ப உறவுகளுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஜி.வெற்றிவீரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
முகவரி: இந்திரா இல்லம், 8-340, கம்பர் குறுக்குத் தெரு, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை (காயிதே மில்லத் கல்லூரி எதிரில்).
– – – – –

தேனி மாவட்டம் கூடலூர் கழகத் தலைவர் ச.மனோகரன் நேற்று (8.11.2025) இரவு 8 மணி அளவில் மறைவுற்றர் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் இன்று (29.11.2025) மதியம் 1 மணிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது. கம்பம் கழக மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
