தஞ்சை, நவ. 26- பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை இரத்தினகிரி அவர்கள் 24-11-2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன் பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி கரந்தை பகுதி தலைவர் விஜயன் பள்ளி அக்ரஹார பகுதிச் செயலாளர் பேராசிரியர் ஜோதிபாசு, மாநில கலைத்துறைச் செயலாளர் ச. சித்தார்த்தன், மாந கரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே. பொய்யாமொழி, திமுக கல்வியாளர் அணி தலைவர் செந்தலை கவுதமன், தென்னகப் பண்பாட்டு மய்ய மேனாள் இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் தஞ்சாவூர் கீழ அலங்கம் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இரத்தினகிரியின் உட லுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
25-11-2018 மாலை 3 மணி அளவில் தஞ்சை கீழ அலங்கம் அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாகச் சென்று இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
மறைந்த இரத்தினகிரி அவர்களின் இரு கண்களும் கொடையாக வழங்கப்பட்டன.
