ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் குண்டுவீச்சு ஒன்பது குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காபூல், நவ. 26- ஆப்கானிஸ் தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. நேற்று (25.11.2025) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசியது. இதில் 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 10 பேர் பலியான நிலை யில் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதனால் கோபமாகி உள்ள தாலிபான்கள், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே போர் வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

குண்டு வீச்சு

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ் தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபான்கள் மீது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாலிபான்களும் பதிலடி கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் கூட இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் வந்தது. ஆனால் அரபு நாடுகள் தலையிட்டு இருநாடுகளையும் அமைதிப்படுத்தின. இதையடுத்து எல்லையில் அமைதி திரும்பியது.

ஆனால் தற்போது மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் தான் காரணம். அதாவது திடீரென்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி திடீ ரென்று ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள குடி யிருப்பு பகுதிகளில் ராணுவ விமானங்களில் நுழைந்தவர்கள் குண்டுகளை வீசி உள்ளனர்.

இதில் 9 குழந்தைகள், ஒரு பெண்கள் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள குனார் மற்றும் பக்திகா மாகாணம் உள்ளிட்ட இடங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அங்கு 4 பேர் காயமடைந்துள்ளனர். இது இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தாலிபானின் செய்தி தொடர்பாளர் ஜபி உல்லா முஜாகித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ் தான் படையினர் குண்டு வீசியதில் பொதுமக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். 9 குழந்தைகள் (5 ஆண்கள், 4 பெண்கள்), ஒரு பெண் உள்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்” என்றார்.

அதேபோல் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் விதிமீறிய தாக்குதல் நடவடிக் கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அதேவேளையில் எங்களின் வான் எல்லை, நிலப்பரப்பு மற்றும் பாதுகாப்பது எங்களின் உரிமையாகவும், கடமையாகவும் உள்ளது. இதனால் சரியான நேரத்தில் உரிய முறையில் பதிலடி கொடுக் கப்படும்” என்று வார்னிங் செய் துள்ளார்.

தற்கொலை படை தாக்குதல்

பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது 24.11.2025 அன்று பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பாகிஸ்தானின் பாரா மிலிட்டரி தலைமையகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்ட்டது. இதில் 3 அதிகாரிகள் இறந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.

போர் மூளும் அபாயம்

குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற அமைப்பினர் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று பாகிஸ்தான் சந்தேகித்தது. இந்த டிடிபி அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதையும், பாகிஸ்தான் ராணுவத்தையும் விரட்டியடிப்பதையும் வாடிக்கை யாக வைத்துள்ளனர்.இதனால் பாகிஸ்தானுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி உள்ள தாக கூறப்படுகிறது. தற்போது இருநாடுகள் இடையே அதிகரித் துள்ள பதற்றத்தால் போர் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *