பொருளாதார நிபுணரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், பீகார் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பதிவான வாக்குகளை விட எப்படி 1.77 லட்சம் வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். மேலும், எஸ்.அய்.ஆர்.க்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை விட, மொத்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
