ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து 26ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

2 Min Read

சென்னை, நவ. 24– ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

தொழிலாளர் சட்டம்

இதுதொடர்பாக அய்என்டியுசி, ஏஅய்சிடியுசி, எச்எம்எஸ், சிஅய்டியு,தொமுச உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி அவற்றை நவ.21 முதல் அமல்படுத்தியுள்ளது.

தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுசார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளும் நவ. 21 முதல் அமல்படுத்தப்படும் என ஜனநாயக விரோத, தன்னிச்சையான அறிவிக்கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல். இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது. ஏற்கெனவே உள்ள 29 தொழிலாளர்நலச்சட்டங்களை நீக்கிவிட்டுபுதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை இயற்றும்போது தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதலாகக் கருதுகிறோம்.

பொது வேலை நிறுத்தம்

இவை தொழிலாளர்களை அடிமையாக்குவதுடன் அவர்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும். புதிய சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள்மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும். அதோடு இன்று (24.11.2025) முதல் வாயிற்கூட்டம், தெருமுனைக் கூட்டம்என எதிர்ப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் திரும்பப் பெறப்படும்வரை உழைக்கும் மக்கள் வலிமையுடன் போராடுவார்கள் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுக்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *