ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதைக் கட்சிக்கும் எவ்விதப் பாகுபாடும் காண்பிக்க வேண்டியதில்லை. இப்பொழுதிருக்கிற நிலைமையில் சுயமரியாதை கட்சியின்றி ஜஸ்டிஸ் கட்சி நீடித்திருக்க முடியாது. “ஜஸ்டிஸ் கட்சியின்றி சுயமரியாதைக் கட்சியும் நீடித்திருக்க முடியாது.” ஆகையால், இரண்டையும் அய்க்கியப்படுத்தி பிராமணரல்லாதாரின் உரிமையைக் காக்க வேண்டிய பொறுப்பு தங்களைச் சார்ந்தது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
30.3.1935 அன்று சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு விருதுநகர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பிராமணரல்லாதார் சங்கம், சுயமரியாதைச் சங்கம் இவைகளின் சார்பாக அளித்த உபசாரப் பத்திரத்திலிருந்து…
(‘குடிஅரசு’ 14.4.1935, பக்.18)
