சென்னை, மே 10 – ஆவின் நிறுவனம் சார்பில், செறிவூட்டப் பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும். இதன் அரை லிட்டர் விலை ரூ.22 ஆகும். தமிழ்நாடு மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது.
ஆவின் சார்பில் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப் புற பால் கூட்டுறவுச் சங்கங்களி லிருந்து பாலை கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் பதப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டில் தினசரி 27 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் சார்பில் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இந்த பால் அரை லிட்டர் விலை ரூ.22 ஆகும்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: உட லுக்குத் தேவையான கால்சியம் சத்தை பெற்றுத் தருவதில் வைட்ட மின்-டி பங்களிப்பதனால், பாலில் வைட்டமின்-டி செறிவூட்டுவது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் வைட் டமின்-ஏ மற்றும் டி செறிவூட்டப் பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர் களின் நலன் கருதி, வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி செறிவூட் டப்பட்ட பசும்பால் (கத்தரி பூ வண்ண பால் உறை) செவ்வாய்க் கிழமை (மே 9) முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிப் பயன்படுத்துவதால், உட லுக்குத் தேவையான வைட்டமின்-ஏ மற்றும் டி கிடைக்கப்பெறும்.
செறிவூட்டப்பட்ட இந்த பசும் பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், பார் வையை மேம்படுத்துவதிலும் எலும்புகளை உறுதிப்படுத்துவ திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ் பரஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.