ஜெய்ப்பூர், நவ.17- ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற சரக்கு வாகனத்துடன் டிராக்டர் மோதியதில் 6 பேர் பலியானார்கள். குஜராத் மாநிலம் பனஸ்சுந்தா மற்றும் தான்சுரா பகுதியை சேர்ந்த சுமார் 20 பக்தர்கள், ஒரு சரக்கு வேனில் ராம் தியோரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்-பாலேசர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது, எதிர்திசையில், தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டருடன் சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில், சரக்கு வாகனம் சென்ற 6 பக்தர்கள் பலியானார்கள். அவர்களில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
