நாகப்பட்டினம், நவ.17- அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்று சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் அர்ச்சகர் பேசும் காட்சிப் பதிவு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்காரவேலவர் கோவில்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்கோவிலுக்குப் பெங்களூருவில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
காட்சிப் பதிவு வைரல்
அப்போது அந்த பக்தர்களிடம் கோவில் அர்ச்சகர் ஒருவர், கோவில் தல வரலாற்றை கூறும்போது, அம்பாள் கையில் தாமரை பூவுடன் இருக்கிறாள். அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும். சாமி எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதை பெங்களூருவில் இருந்து வந்த பக்தர்கள் காட்சிப் பதிவு எடுத்து உள்ளனர். தற்போது இந்தக் காட்சிப் பதிவு கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது
