காந்தி நகர், நவ.17 குஜராத் மாநிலம் பாவ்நக ரைச் சேர்ந்த சாஜன் பரையா (வயது 25) மற்றும் சோனி ரத்தோட் (வயது 23) ஆகி யோர் கடந்த ஓராண்டாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
மணமக்களுக்கிடையே சண்டை
இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று (16.11.2025) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்கு கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.
