மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையின் நம்பகத் தன்மையின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரே பெண்ணின் ஒளிப்படம், சுமார் 22 வாக்காளர் அடையாள அட்டைகளில் இடம்பெற்றதாகவும், ஆனால் அந்தப் பெயர்களோ நரேந்திர பிரதாப், சுமன் சர்மா, கத்ரீனா, முஹம்மத் அஸ்ஸலாம், ராஜ்குமாரி தேவி, ராதே ஷ்யாம், அன்வர் உசைன், மகேஷ் கோசி, தினேஷ் தேவி என்று இந்து உயர் ஜாதி ஆண், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஆண், இஸ்லாமிய ஆண் மற்றும் பெண் பெயர்களாகவும் வேறுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பின்மையின் மறுவடிவமா அல்லது நிர்வாகப் பிழையா?
ஓர் ஒற்றைப் பெண்ணின் படத்தில் இத்தனை வேறுபட்ட சமூக, மத மற்றும் பாலின அடையாளங்கள் இணைக்கப்பட்டிருப்பது, வாக்காளர் பட்டியல் தரவு உள்ளீட்டில் உள்ள மிகப் பெரிய குளறுபடியைக் காட்டுகிறது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுவதுமாக மின்னணுமயமாக்கப்பட்டிருக்கும் சூழலில், இத்தகைய மோசமான பிழைகள் ஏற்படுவது என்பது, தரவு உள்ளீட்டுத் தரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதையே காட்டுகிறது.
வாக்காளர் பட்டியலில் “போலி வாக்காளர்களை” உருவாக்கும் முயற்சி குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனெனில், ஒரே ஒளிப்படம் கொண்ட பல அட்டைகள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பு என்ற வகையில், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை சாதாரணப் பிழையாகக் கடந்து செல்ல முடியாது.
ஹிந்து உயர்ஜாதி ஆண், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஆண், இஸ்லாமிய ஆண், மற்றும் பெண் ஒரே படத்திற்கு பெயர் சூட்டியுள்ளது தேர்தல் ஆணையம் இது சாதனை இல்லாமல் என்ன உலகின் எந்த ஒரு அமைப்பும் இப்படி செய்யுமா?
