12.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் அவசர கதியில் எஸ்.அய்.ஆர் கொண்டு வந்தது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: பதிலளிக்க இரண்டு வாரம் கெடு.
* வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து தமிழ்நாட்டில் 43 இடங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
* டில்லியில் கேரள இளைஞர்கள் மீது தாக்குதல், ஹிந்தி பேசு என கட்டாயப்படுத்தப்பட்டனர். உச்ச நீதிமன்றம் கண்டனம்
தி ஹிந்து:
* கேரளா போன்ற பாஜக அரசு அல்லாத மாநிலங்கள் புதிய வரைவு தொழிலாளர் கொள்கை மற்றும் நான்கு தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்துவதற்கு முன்பு மாநிலங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் பரந்த ஆலோசனையை மேற்கொள்ள வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* டில்லி குண்டுவெடிப்பு: உள் பாதுகாப்பில் “கடுமையான குறைபாடுகள்” என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் கண்டனம். “சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் முதன்மைப் பொறுப்பை ஒன்றிய அரசின் உள்துறை இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என அக்கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா தாக்கு.
– குடந்தை கருணா
