எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் அ.தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

2 Min Read

சென்னை, நவ. 11- எஸ்அய்ஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

எஸ்அய்ஆர் எனும் ஆயுதம்

திருச்சி சிறீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்லத் திருமண விழா, சோமரசம்பேட்டையில் நேற்று (10.11.2025) நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நம்மை அழிக்க எதிரிகள் புதுப்புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரித் துறை, சிபிஅய் போன்றவற்றை ஏவினார்கள். தற்போது எஸ்அய்ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒருபோதும் தி.மு.க.வை அவர்களால் அழிக்க முடியாது.

முத்தரையர் சமுதாயத்தினர் மீது கடைக்கண் பார்வையை திருப்புங்கள் என்று அச்சமூகத்தின் பிரதிநிதி செல்வக்குமார் பேசினார். கடைக்கண் பார்வை மட்டுமல்ல, எல்லா பார்வையும் உங்கள் பக்கம் இருக்கிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

அ.தி.மு.க. மனு தாக்கல்

எஸ்அய்ஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். உங்களுக்கு உள்ளபடியே அதில் அக்கறை இருக்கிறது என்றால், உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால், முன்கூட்டியே வழக்கை தொடுத்திருக்க வேண்டும்.

பாஜகவோ, தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும், அதை ஆதரிக்கின்ற நிலையில் இன்றைக்கு அடிமையாக உள்ளார்களே தவிர, அதை எதிர்க்க அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை. இருந்தாலும், திமுக தொடுத்திருக்கக்கூடிய வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு கபட நாடகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வாக்குச்சாவடி நிலை அலுவலர்(BLO) என்பது, அங்கு இருக்கக்கூடிய அரசு ஊழியர்களை வைத்து அந்தப் பணிகளை செய்வது. அவர்களுக்கு உதவ, கட்சி சார்ந்த பிரதிநிதிகளை வாக்குச்சாவடி முகவர்களாக(BLA2) நாம் நியமிக்கிறோம்.

திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவருக்கு முறையாக பயிற்சி அளித்து நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படி நியமிக்கப்பட்டிருப்பது தவறு என்றும், அதை நீக்க வேண்டும்; அதை தடுக்கவேண்டும் என்றும் சொல்லி, அதை அடிப்படையாக வைத்து அதிமுகவின் சார்பில் நீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டில்லியில் இருக்கக்கூடிய பிக் பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால், அதையும் தாண்டி மற்றொரு காமெடியும் இன்றைக்கு செய்திருக்கிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.51 லட்சம் நிதி

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 51 லட்சம் தேர்தல் நிதியாக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *