கயா, நவ.10 பீகார் மாநிலம் கயா நகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பத்ரா, ஹெர்ஹஞ்ச், கெவால்தி ஆகிய கிராமவாசிகளுக்கு வளர்ச்சி என்பது கனவாகவே உள்ளது.
மோர்ஹர் ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்பதுதான் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராம மக்களின் 77 ஆண்டு கோரிக்கை. சந்தை, பள்ளி கல்லூரி, மருத்துவமனை செல்ல வேண்டுமானால் மார்பளவு தண்ணீரில் நீந்திச் செல்ல வேண்டி உள்ளது. இதுதவிர, ஆண்டுதோறும் மழைக் காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் 4 மாதங்களுக்கு மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராமப் பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எங்களுக்கு பாலம் கட்டித் தரும் வரை நாங்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’’ என்றார்.
