பாட்னா, நவ.5 “பிகாரில் மகள்களும், மரு மகள்களும் பாதுகாப்பாக இல்லை” என்று பிரதமா் நரேந்திர மோடி பேசியதன் மூலம், பீகாரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை அவா் ஒப்புக் கொண்டுவிட்டார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள் ளார்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், முக்கியமாகக் குறிப்பிட் டவை: கூட்டணி ஆட் சியின் நிலை: “பீகாரில் 20 ஆண்டுகளாக நிதீஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். ஆனால், இப்போதும் பீகாரில் பெண்களுக் குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை மோடி பேசி வருகிறார். இதன் மூலம் தங்கள் கூட்டணி ஆட்சியின் நிலையை அவா் ஒப்புக் கொண்டு விட்டார்.”
“பீகாரை பெண்களுக் குப் பாதுகாப்பு இல் லாத மாநிலமாகவே இப்போ தைய ஆட்சியாளா்கள் வைத்துள்ளனா்.”
ஊட்டச்சத்துக் குறைபாடு
“தேசிய குடும்ப நலத் துறை ஆய்வுப்படி, பீகாரில் 70 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக் குறையுடன் உள்ளனா். 40 சதவீத குழந்தை களுக்கு வைட்டமின் குறைபாடு பிரச் சினைகள் உள்ளது. 11 சதவீத குழந்தைகள் மட்டுமே போதுமான ஊட்டச்சத்து பெற்று வளா்கின்றனா்.” “இந் நிலையை மாற்றி பீகாரை ஒட்டு மொத்தமாக முன் னேற்ற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக் கம்” என்று குறிப்பிட்ட கார்கே, அதற்கான வாக்குறுதிகளையும் பட்டிய லிட்டார்:
பெண்களுக்கு உதவித்தொகை
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை. மாத ஓய்வூதியம்: முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மாத ஓய்வூதியம். முக்கிய குறிப்பு: “இது தோ்தலுக்கான வாக்குறுதிகள் அல்ல. பீகார் மக்களின் வாழ்க்கையை மாற்றும் வாக்குறுதிகள். காங் கிரஸ் ஆளும் மாநிலங் களில் அனைத்து வாக் குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி வந்துள் ளோம்” என்றும் மல்லிகார் ஜுன கார்கே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
