‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது உச்சநீதிமன்றம் கருத்து

2 Min Read

புதுடில்லி, நவ.5- குடும்பத் தகராறு, பரஸ் பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு போன்ற பிரச்சினைகளில் ‘‘போக்சோ” சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று உச்சநீதி மன்றம் கவலை தெரிவித் துள்ளது.

பொதுநல மனு

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் ஆபத் ஹர்ஷத் போண்டா ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்முறை குறித்த சட்டங்கள், அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி அளிக்க அனைத்துக் கல்வி நிறுவ னங்களையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு

பாலியல் சமத்து வம், பெண்கள், சிறுமி களுக்கான உரிமைகள், அவர்கள் கண்ணியத் துடன் வாழும் உரிமை ஆகியவை யற்றி விழிப் புணர்வை உறுதி செய்ய பண்பு பயிற்சி சேர்க்கப்பட வேண்டும். சிறுவர்களின் மனநிலையை மாற்றும் நடவடிக்கைகள், பள்ளிக் கூட நிலையில் இருந்தே தொடங்கப்படவேண்டும்.
பாலியல் வன்முறை அதற்கான தண்டனை போக்சோ சட்டம் ஆகி யவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய கல்வி அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கை அனுப்பியது.

தவறான பயன்பாடு

இந்நிலையில், நேற்று (4.11.2025) நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- ஒரு விசயத்தை குறிப்பிட விரும்புகிறோம். குடும் பத் தகராறு, இளம் வயதினரிடையே ஒருவருக் கொருவர் சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு போன்ற சம்பவங்களில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ‘போக்சோ’ சட்டப் பிரிவுகள் குறித்து சிறுவர் களிடமும், ஆண்களிடமும் நாம் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். இவ் வாறு நீதிபதிகள் கூறினர்.
விசாரணையை டிசம் பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *