பாட்னா, நவ.4- பீகார் இளை ஞர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேலையில்லா திண்டாட் டமே காரணம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.
பீகார் சட்டசபை தேர்தலை யொட்டி, சாஹர்சா மாவட்டம் சோனபர்சாவில் நடந்த இந் தியா கூட்டணி தேர்தல் பிர சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:- நாட்டையும், பீகாரையும் இழிவு படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். அவர் இழிவு படுத்துவதற்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பிரதமர் மோடி, தேவையற்ற விசயங்களை பேசுகிறார். ஆனால், பீகாரில் 20 ஆண்டுகளாக நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் ஊழல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை.
ரிமோட் கண்ட்ரோல்
முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி நடத்தவில்லை. அதற்கு பதிலாக டில்லி யில் இருந்த படி, பிரதமர் மோடியும், இதர ஒன்றிய தலை வர்களும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்குகிறார்கள்.
தேர்தலில் இலவச அறிவிப்பு வெளி யிடுவதற்கு முன்பு, கடந்த 20 ஆண்டுகளில் பீகாருக்கு செய்தது என்ன என்ற கேள்விக்கு பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதலில் பதில் அளிக்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம்
அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள வாக்குரிமையை பா.ஜனதா கூட்டணி அரசு அச் சுறுத்தி வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடு வதால், பீகார் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வரு கிறார்கள். அதே சமயத்தில், வேலை வாய்ப்பை உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்கள், பா.ஜனதாவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்கப் படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
