புவனேஸ்வர், நவ.4 ஒடிசா மாநிலம் நவ்படா சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக மறைந்த நவ்படா தொகுதி பிஜு ஜனதா தள சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திர தோலாக்கியாவின் மகன், ஜெய் தோலாக்கியா, பாஜகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில் இடைத்தேர்தலில் பாஜக சார்பில், ஜெய் தோலாக்கியா போட்டியிடவுள்ளார். இதனிடையே நேற்று (3.11.2025) நவ்படா தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேசுகையில், ‘‘முன்பெல்லாம் வாக்கு திருடும் கட்சியாக இருந்த பாஜக தற்போது வேட்பாளர்களையும் சேர்த்தே திருடி வருகிறது.
நமது முதுகில் குத்தி வெற்றி நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான பலனை அனுபவிப்பார்கள். நவ்படா தொகுதியில் போட்டியிடும் பிஜு ஜனதா தள வேட்பாளர் ஸ்னேகானினி சுரியாவுக்கு பொது மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்’’ என்றார்.
