திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ. 04-  திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு நவ.14ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவ.14ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்ளலாம். உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், தொழிற்கூடத்தில் தளவாடங்கள் ஆகிய ஓர் ஆண்டு பிரிவுகளிலும், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ் என்ற 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சி முடித்தவுடன், வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனத்தில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாதம் ரூ.750 உதவித் தொகை, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000, பாடப் புத்தகங்கள், வரைப்பட கருவிகள், 2 செட் சீருடைகள், பேருந்து பயண அட்டை ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. நேரடி சேர்க்கைக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குமரன் நகர், இரண்டாவது தெரு திருவொற்றியூர், சென்னை -19, என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *