நெல்லை, அக்.27 ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் ஒன்றிய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லையில் நேற்று (26.10.2025) அவர் அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் ஆய்வு குழு இந்த முறையாவது மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் ஒன்றிய அரசு கிள்ளிக் கொடுக்கிறது.
விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் நிவாரணம் கிள்ளிக் கொடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை இல்லை. விவசாயிகளின் துன்பத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத வகையில் நிவாரணத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் உண்மையிலேயே உதவி செய்யக்கூடிய எண்ணத்தோடு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பீகார் தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பு. வெல்லும் என நம்பிக்கையோடு காத்திப்போம் என்றார்.
