பீகார் சட்டசபை தேர்தலுக்கு இந்தியா கூட்ட ணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந் திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்கள் ஏமாந்து விட்டனர். தேஜஸ்வி, முதலமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள் ளார் . இந்தியா கூட்டணி என்பது ஒற்றை நபர் கட்சி அல்ல, இது ஒரு மக்கள் கூட்டணி. பரஸ்பர மரியாதை, அனைவரையும் அரவணைத்தல், அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை அடிப்படையில் உருவான கூட்டணி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
