தீபாவளியன்று இரவு நகரம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவான ‘இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ மற்றும் ‘மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது’ என்ற கடுமையான நிபந்தனைகள் காற்றில் பறந்தன.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறை, இந்த விதிமீறல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது பலரால் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டது.
