சென்னை, அக்.22 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், பணியின்போது இறந்த காவலர் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
காவலர் வீர வணக்க நாள்
லடாக் பகுதியில் 1959-ஆம் ஆண்டு சீனப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய சிறப்புக் காவல் படை (சிஆர் பிஎப்) வீரர்கள் கொல்லப்பட்ட னர். இதை நினைவு கூரும் வகையில், காவல் துறையில் பணியிலிருந்தபோது உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்.31-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னை, மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் நேற்று காலை காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
பணி நியமன ஆணை
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியிலிருந்த போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 110 பேருக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கும், 65 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் மற்றும் வரவேற்பாளர் பணியிடத்துக் கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, வழங்குவதின் அடையாள மாக 20 வாரிசுதாரர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் பணியின்போது வீரமரண மடைந்த திருப்பூர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.சண்முகவேல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமைக் காவலர் எஸ்.ஜெஸ்மின் மில் டன் ராஜ் ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் ஊதியத் தொகுப்பு திட்டத்தில் தனிநபர் காப்பீட்டு தொகையாக
தலா ரூ.1 கோடிக்கான காசோலை கள், பணியின்போது வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பி.விஜயகுமார் மற்றும் எஸ்.ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ 20 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.
இதுதவிர பணியின்போது விபத்து களில் மரணம் அடைந்த காவலர்கள் என மொத்தம் 6 காவலர்களின் குடும்பத்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊதியத் தொகுப்புத் திட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளின் மூலம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் கருணைத் தொகை என ரூ.5.70 கோடிக்கான காசோ லைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
