சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். அதிகபட்சமாக கடந்த 2024 ஆண்டு மே 2-ஆம் தேதி தினசரி மின் தேவை 20,830 மெகாவாட் பாகப் பதிவானது. இந்தாண்டு அதிகபட்சமாக கடந்த ஏப்.24-ஆம் தேதி 20,148 மெகாவாட் மின் தேவை பதிவானது.
கோடை காலத்தில் வெயி லின் தாக்கம் காரணமாக மின் தேவை எப்படி அதிகரிக் கிறதோ,அதே போல், மழை மற்றும் குளிர் காலங்களில் மின்சாரப் பயன்பாடு குறைந்து, மின் தேவையும் குறைவது வழக்கம்.
மின்நுகர்வு 10,923 மெகாவாட்
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரு கிறது. மழை காரணமாக மின் தேவையும் குறைந்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி மின் தேவை 12,557 மெகாவாட்டாகவும், 20-ஆம் தேதி தீபாவளி அன்று 10,923 மெகாவாட்டாகவும் இருந்தது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறைந் துள்ளது. பொதுவாக, பருவ மழையின் போதுமின் பயன்பாடு 50 சதவீதம் குறையும். மேலும் தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான அலுவல கங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மின் நுகர்வு குறைவாக இருந்தது. பொதுவாக, தமிழ்நாட்டில் சென்னை நகரில் அதிகபட்ச மின்தேவை இருக்கும் நிலையில், பலர் சொந்த ஊர்களுக்கு சென் றுள்ளதால் சென்னையின் மின்தேவை குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், அனல் மின் நிலையம் மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களில் 50 சதவீத உற்பத்திகூட மின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியாவின் தீபாவளியே காரணமாம்!
இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டில்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம் பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
