வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் புலம் பெயரும் போது அவர்களுடன் ஜாதியும் விசா இல்லாமல், பாஸ்போர்ட் இல்லாமல், டிக்கெட் கூட இல்லாமல் கூடவே புலம் பெயர்ந்து விடுகிறது. இதோ விகடகவி இணைய இதழில் (<www.vikatakavi.in>) தில்லைக்கரசி சம்பத் என்பவரின் பதிவு.
2018-ஆம் ஆண்டு Equality Labs எனும் குடிமை உரிமைக்குழு நடத்திய ஆய்வில் “ அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 67% தாழ்த்தப் பட்டோர் சமூகத்தினர் மிக மோசமாக நடத்தப்படு கிறார்கள்” என்பது வெளிப்பட்டது. அமெரிக்காவில் 2018இல் இந்தியர்களிடையே ஜாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து எடுக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், 10இல் 4 பேர் கல்வி பயிலும் இடத்திலும், 3இல் 2 பேர் பணிபுரியும் இடங்களிலும் பாரபட்சங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
2இல் ஒருவர் தனது ஜாதி பற்றி அவர் பழகும் சக இந்தியர்களுக்கு தெரிந்து விடுமோ என்று அச்சப் படுகிறார். 4இல் ஒருவர் உடல்ரீதியான வன் முறையை எதிர்கொள்கிறார்கள். கடல் கடந்தாலும் நம்மைப் பிடித்த ஜாதி ஒழியவில்லை. அங்கேயும் ஜாதி வெறி தலை விரித்தாடுகிறது.