தேர்தல் ஆணையத்தில் 2597 மாநில கட்சிகள் பதிவு

1 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி, மே 18 – இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட் சிகள் மற்றும் பதிவு செய்யப் பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை தயாரித்து உள்ளது.இதன்படி நாட்டில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்ட தேசிய கட்சிகளாக உள் ளன. மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள் ஆகும்.

இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத் தும் தேர்தல் ஆணையத்தி பதிவு செய்யப்பட்ட, தேர்தல் ஆணை யத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழ் நாட்டில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படி பதிவு செய் யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு பதிவு செய் யப்பட்டு முறையாக செயல் படாத கட்சிகள் என 218 மாநி லக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 282 கட்சிகள் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டு உள் ளன. தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பி டத்தக்கது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி. மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *