சென்னை, அக். 21- சென்னையில், வானிலை ஆய்வு மய்ய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாகும். குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. தமிழக கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
