உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் கழகம்

தூத்துக்குடி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்விடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகர பேருந்து நிலையம் அருகில் 16/10/2025 அன்று மாலை 5.00 மணியளவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளை கண்டித்து திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் அ.வெ.முரளி வரவேற்புரையாற்றியும், நிகழ்ச்சியினை தொகுத்தும் வழங்கினார்.

தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன். செயலாளர் கோ.நாத்திகன், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு.லோகநாதன், செயலாளர் செ.கோபி, செங்கை மாவட்ட தலைவர் அ. செம்பியன், செயலாளர் ம.நரசிம்மன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், காப்பாளர்கள் ச.வேலாயுதம், ஆர் டி. வீரபத்திரன், காஞ்சிபுரம் மாநகர தலைவர் ந. சிதம்பர நாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மு. அருண்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பா. இளம்பரிதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ. ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மன்றம் வழக்குரைஞர் ஆர். திருமலை, மனித நேய மக்கள் கட்சி எப். தாஜுதின், மக்கள் நீதி மய்யம் த. கண்ணன், மதிமுக பா. குமரேசன். இந்திய பொதுவுடமைக் கட்சி ஜெ. கமலநாதன், விசிக. மாவட்ட செயலாளர் மதிஆதவன், தமிழ் உரிமை கூட்டமைப்பு காஞ்சி அமுதன், கழக சொற்பொழிவாளர் மழவை தமிழமுதன், திமுக தலைமை கழக சொற்பொழிவாளர் நாத்திகம் நாகராசன், ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்  சிறப்புரையாற்றினார். அவரது உரையில் ஸநாதனவாதிகளை கண்டித்தும், ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் இரட்டை வேடத்தினை அம்பலப்படுத்தியும் துக்ளக் கின் போலி தேசபக்தி நாடகத் தினை விளக்கியும் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கி. இளையவேள் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் விசிக பாசறை செல்வராஜ், சிபிஅய் பி. வி. சீனிவாசன், திருக்குறள் பேரவை குறளமிழ்தன், தன்னாட்சி தமிழகம் பெ. பழனி, பகுத்தறிவு பாடகர் காஞ்சி. உலகஒளி,  திராவிடர் கழக தோழர்கள் ஆ.மோகன், வி. கோவிந்தராஜ், எஸ். செல்வம், போளூர். பன்னீர்செல்வம், அ.வெ. சிறீதர், அ. அருண்குமார், பல்லவர்மேடு சேகர், நாகை. லெனின், ராணிப்பேட்டை, தாம்பரம், செங்கற்பட்டு, சோழிங்கநல்லூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சார்ந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் துவங்கும் முன் காஞ்சிபுரம் கெங்கை கொண்டான் மண்டபம் தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலையணிவித்து புதுப்பிக்கப்பட்ட கட்டுமானத்தினை பார்வையிட்டார்.

கோவை

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.10.2025 அன்று காலை 10 மணி அளவில் உக்கடம் வள்ளி அம்மை பேக்கரி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு – நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

மாவட்டச்செயலாளர், வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு வேலுச்சாமி, செயலாளர் கா.சு.ரங்கசாமி, பொள்ளாச்சி மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து, செயலாளர் ஆ.ரவிச்சந்திரன், நீல மலை மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன், செயலாளர் ச.ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கழக சொற்பொழிவாளர் காஞ்சி கதிரவன் கண்டன உரை ஆற்றினார்.

முன்னதாக ஆர்பாட்டத்தில் ‘‘உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான செருப்பு வீச்சைக் கண்டிக்கிறோம்! ஸநாதனத்தைக் காப்பதற்கு கடவுள் சொல்லி செருப்பு வீச்சாம்! செருப்பை எடுக்கும் ஸநாதனமே! உணர்வு நெருப்பைத் தூண்டாதே! ஸநாதனத்தின் பார்வையிலே தலைமை நீதிபதி என்றாலும் தாழ்த்தப்பட்டவரா? உயர் பொறுப்பு வகித்தாலும் வர்ணாசிரமத்தின் பார்வையிலே நாமெல்லோரும் சூத்திரரா? நீதித் துறைக்கு மிரட்டல் விடுத்த இந்துத்துவாவை கண்டிக்கின்றோம். ஒடுக்கப்பட்டோரின் சுயமரியாதைக்குச் சவால் விடும் ஸநாதன வாதிகளை எதிர்ப்போம், ஸநாதனத்தை, வர்ணாஸ்ரமத்தை முறியடிப்போம்! சுயமரியாதை மீட்புக்கான நூற்றாண்டு போராட்டம்! தொடரும்” என முழக்கங்களை எழுப்பினார்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம், பெரியார் மருத்துவக் குழும தலைவர் டாக்டர் இரா.கவுதமன், மாநில அமைப்பாளர், ப.க. தரும.வீரமணி, மாநில துணை இளைஞரணி செயலாளர், மு.வீரமணி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.இராகுலன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து மாலையப்பன், கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட மகளிரணித் தலைவர் முத்துமணி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர். ப.க.சின்னசாமி, ப.க செயலாளர் அக்ரி நாகராஜ், தி.தொ.அணி மாவட்டச் செயலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, , மாநகர அமைப்பாளர் யாழ்.வெங்கடேஷ், , எட்டிமடை மருதமுத்து, பகுதிச் செயலாளர், சுந்தராபுரம் ப.ஜெயக்குமார், பகுதித் தலைவர், வடவள்ளி ஆட்டோ சக்தி, செயலாளர், இராஜசேகர், பகுதி தலைவர் பீளமேடு முருகானந்தம், செயலாளர், மா.இரமேஷ், பகுதித் தலைவர். கணபதி கவி கிருஷ்ணன், செயலாளர், திராவிட மணி, மேனாள் பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, ப.க. ஆடிட்டர் ஆனந்தராஜ், மாவட்ட செய்தியாளர் அ.மு.ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் செ.மதியரசு, செயலாளர் சா.ராஜா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் த.க.கவுதமன், செயலாளர் ஞா.தமிழ்ச்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக சுந்தராபுரம் பகுதி தலைவர் தெ.குமரேசன் நன்றியுரையாற்றினார்.

திராவிடர் கழகம்

புதுக்கோட்டை

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசி நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்ற கழகத் தலைமையின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகில் 16.10.2025 அன்று பகலில் புதுக்கோட்டை, அறந்தாங்கி கழக மாவட்டங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மூ.சேகர், த.சவுந்தரராசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்விற்கு கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, திருமயம் ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், மகளிரணி த.கற்பகம், ம.மு.கண்ணன், அறந்தாங்கி நகரத் தலைவர் ஆ.வேல்சாமி, புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.மு.தருமராசு, வீரவிளையாட்டுக் கழக அமைப்பாளர் க.முத்து, விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல், மாநகரத் துணைத் தலைவர் செ.அ.தர்மசேகர், இளைஞரணியைச் சேர்ந்த ஆறு.பாலச்சந்தர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மழை விடாது பெய்தாலும் சாலையில் குடையைப் பிடித்துக் கொண்டும், அட்டைப் பெட்டிகளைத் தலையில் வைத்துக் கொண்டும் தோழர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

செருப்பு வீச்சுச் சம்பவத்தை எப்படி நடத்தினார்கள், அதை எப்படி நாம் பார்க்க வேண்டும் என்பது குறித்து கண்டன உரையாற்றிய கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் விளக்கமாகப் பேசினார்.

மதுரை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நடத்திய வழக்குரைஞரை கண்டித்தும் நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர் என்ற தலைப்பில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராஜா தலைமையில் மதுரை மாவட்ட காப்பாளர் சே முனியசாமி, மற்றும் மேனாள் கல்வி அதிகாரி ச.பால்ராஜ் முன்னிலையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் இராம .வைரமுத்து,  மதிமுக தொழிலாளர் அணி இணை பொதுச் செயலாளர் மகபூப்ஜான் மற்றும்  கழக பேச்சாளர் வேங்கை மாறன்,  மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் தேவராஜ பாண்டியன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சட்டமாணவி மாணிக்க வள்ளி ஆகியோர் முன்னுரையோடு கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவைபுலிகேசி சிறப்பான கண்டன உரை நிகழ்த்தினார்.

மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் திருப்பதி, மாவட்ட துணைத்தலைவர் நா. முருகேசன். மாவட்ட துணை தலைவர் பவுன்ராஜ்,  மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா, மாவட்ட துணை செயலாளர் க. தனுஷ்கோடி, மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப் பெரியார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பா காசி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராக்கு தங்கம், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பி பாக்கியலட்சுமி, தொழிலாளர் அணி கா சிவகுருநாதன், புறநகர் மாவட்ட துணைத்தலைவர் சிங்க ராஜன், மேலூர் நகர செயலாளர் பெரியசாமி, புதூர் பகுதி பொறுப்பாளர் அழகு பாண்டி, போட்டோ ராதா, வில்லாபுரம் அ.ஆறுமுகம் கலந்து கொண்டனர். நன்றி உரையை புறநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரா .கலைச்செல்வி கூறினார். மாவட்ட செயலாளர் இரா.லீ சுரேசு ஒருங்கிணைப்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

திராவிடர் கழகம்

தருமபுரி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து தருமபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16-10-2025 அன்று மாலை 04:00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் சாரம்சங்களையும், நீதித்துறையின் வரலாற்றையும் எடுத்துரைத்தார்,

தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இரண்டு மாவட்ட கழகத் தோழர்களையும் வரவேற்று மற்றும் ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்களை முழக்கமிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கவுரையாக தருமபுரி மாவட்டத் தலைவர் கு.சரவணன், அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் தங்களின் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்ட தொடக்கவுரையாக மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநதி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சா.இ. ராஜேந்திரன் ஆகியோர் திராவிடர் கழகம் எவ்வாறு நீதியின் பக்கம் நிற்கிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் மக்களுக்கான போராட்டங்களை கண்டன உரையில் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கண்டன் உரையில் “இந்தியாவை ஆட்சி செய்கிற பிஜேபி எண்ணற்ற அட்டூழியங்களை செய்துக்கொண்டிருக்கிறது, இந்தியாவிலுள்ள அனைத்து துறைகளிலும் உச்சகட்ட உயர்ந்த பொறுப்பில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் உள்ளனர், இவர்கள் நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு பறித்துக்கொண்டுள்ளனர்.இந்திய வரலாற்றில் 78- ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.வி.கவாய் இரண்டாவதாக வந்திருக்கிறார்

அது மதவாத பிஜேபி காரர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் செருப்பை எடுத்து வீசுகிறார்கள். இது பி.ஆர்.கவாய் மீது வீசப்பட்ட செருப்பு மட்டுமல்ல சட்டத்தை இழிவுபடுத்தும் செயல்பாடு, நீதியின் மீது வீசப்பட்ட செருப்பு இது, நீதித்துறையை அச்சுறுத்தும் செயல்பாடு என்பதனையும் உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது மதவாத பிஜேபி காரர் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் செருப்பை வீசிவிட்டு ஸனாதனத்திற்கு ஒரு இழிவு என்றால் சும்மா விடமாட்டேன் என்று கூறுகிறார். கேட்டால் கடவுள் தான் செய்ய சொன்னதாக அராஜக போக்கில் நீதிமன்ற வளாகத்தில் நடந்துள்ளதாகவும் மேலும் இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர் அனைத்து துறைகளிலுள்ள உச்சகட்ட உயர் பதவிக்கும் நீதியை வழங்கக்கூடியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார் ஆனால் அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் இதுபோன்ற அச்சுறுத்தல் பிஜேபி ஆளும் இந்தியாவில் ஸனாதனவாதிகளால் நடைபெறுகிறது என்கிற கருத்தினை பதிவை கண்டன உரையில் பதிவு செய்தார்.

இந்நிகழ்வில்மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், மேனாள் மாவட்டத் தலைவர் மு.பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு, இளைஞரணி மாவட்டத் தலைவர் மா.முனியப்பன், நகர செயலாளர் இரா.பழனி, தருமபுரி மாவட்ட மகளிரணி தலைவர் நளினிகதிர், அரூர் கழக மாவட்ட மகளிரணித் தலைவர் மணிமேகலை, தருமபுரி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா, அரூர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் பு.வினோத்குமார், தருமபுரி ஒன்றியத் தலைவர் மா.சென்றாயன், நகர இளைஞரணித் தலைவர் கண்.இராமச்சந்திரன், நகரத் தலைவர் கடத்தூர் இரா.நெடுமிடல், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் மா.சுந்தரம், விவசாய அணித் தலைவர் ஊமை.காந்தி, ஓசூர் மாவட்ட துணைச் செயலாளர் எழிலன், அரூர் இளைஞரணி சிறீகுரு, அரூர் இளைஞரணி குணசீலன், தருமபுரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, தருமபுரி இளைஞரணி கா.காரல்மார்க்ஸ், அரூர் மகளிரணி கல்பனா, அரூர் மகளிரணி உமா, தருமபுரி மகளிரணி ஊமை.சிகா, அரூர் கவிஞர்.பிரேம்குமார், ஆசிரியர் எல்லை தன்ராஜ், இராமகிருஷ்ணன், தாளநத்தம் மேனாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முனுசாமி, பாளையம் பசுபதி, இராமலிங்கம், கே.முருகன், தண்டபாணி ஆகியோர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இறுதியாக கு.தங்கராஜ் அரூர் கழக மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொணட அனைவருக்கும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறி முடித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *