வல்லம், அக். 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் எச்.அய்.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 15.10.2025 அன்று நடைபெற்ற செஞ்சுருள் சங்க கூட்டத்தை இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்து உரையாற்றும் போது மாணவ, மாணவிகள் தீய பழக்கங்களை விட்டு தங்கள் உடலையும், உள்ளத்தையும் வளமாகவும் நலமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்த கிளினிகல் சர்வீஸ் அலுவலர் சரஸ்வதி சிறப்புரை வழங்கி
னார்.
மாணவ, மாணவிகள் அனைவரும் எச்.அய்.வி மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை பற்றிய வழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறி
னார்.
வல்லம், அரசினர் ஆரம்ப சுகாதார மய்யத்தின் ஆலோசகர் ஆர்.சுரேஷ் எய்ட்ஸ் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.
இக்கல்லூரி துணைமுதல்வர் முனைவர் ஜி.ரோஜா சிறப்புரையாற்றும் போது செஞ்சுருள் சங்கத்தின் செயல்பாடுகள், இன்றைய இளைஞர் சமூகத்தின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதை விரிவாக எடுத்துரைத்
தார் மற்றும் முதன்மையர் ஜி.ராஜாராமன் உரையாற்றும் போது மாணவர்கள் தீய பழக்கங்களை விட்டொழித்து கல்வியில் கவனம் செலுத்து
மாறு விரிவாக எடுத் துரைத்தார்.
நிகழ்ச்சியின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் ஜி.செங் கொடி வரவேற்புரை மற்றும் ஆர்.நடராஜன் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பி.மாதவன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது