திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி “மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான இணைய வாயிலான கருத்தரங்கை 11.10.2025 முதல் 15.10.2025 வரை நடத்தியது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் Student Centric Methods in Pharmaceutical Education என்ற தலைப்பில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியரும் கல்லூரியின் மேனாள் மாணவியுமான முனைவர் பி. ரமா கருத்துரை யாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 11.10.2025 அன்று மாலை 3 மணியளவில் Digital Clinical Trials என்ற தலைப்பில் சென்னை Saveetha Institute of Medical And Technical Sciences நிறுவனத்தின் மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியர் முனைவர் பி. சரண்யா உரையாற்றினார். இரண்டாம் நாளான 12.10.2025 அன்று காலை 10 மணியளவில் கருநாடகா மாநிலத்தின் Sri Adichunchanagiri மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் கே. நாக பிராசாந்த் Readiness for Docking: Data Collection and Target Preparation Strategies குறித்தும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறை ஆராய்ச்சி உதவியாளர் எம். ராம் பிரவீன் குமார் Advancing Research: Traditional versus State of art technologies in Pharmaceutical Research என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
மூன்றாம் நாளான 13.10.2025 அன்று காலை 11 மணியளவில் சிறீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் சி. ஜெய்காந்த் AI in the Classroom: From Chalkboard to Code in Pharmacology Education என்ற தலைப்பிலும் மாலை 3 மணியளவில் நடைபெற்ற கருத்தரங்கில் ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியின் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எல்.பிரியங்கா துவாரம்புடி AI and Digital Tools: Transforming the Future of Pharmaceutical Sciences என்ற தலைப்பிலும் உரையாற்றினர். நான்காம் நாளின் (14.10.2025) முதல் அமர்வில் வதோதரா Parul பல்கலைக்கழகத்தின் பார்ம் டி பிரிவின் இயக்குநர் முனைவர் ராஜேஷ் வெங்கடராமன் Digital Intelligence in Clinical and Pharmaceutical Education: Ethical, Practical and Transformative Pathways என்ற தலைப்பிலும்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். செல்வ முத்துக்குமார் AI-Powered Teaching and Learning in Pharmacy
Education என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
நிறைவு நாளான 15.10.2025 அன்று காலை 10 மணியளவில் ஜெஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ். ஜூபி Integrating AI Powered molecular modeling tools in drug discovery process என்ற தலைப்பிலும் இரண்டாவது அமர்வில் பெங்களூரு அல்-அமீன் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறைத் தலைவர் முனைவர் வித்யா மூர்த்தி AI and You: Preparing clinical Pharmacy students for the future of Healthcare என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
மூன்றாவது அமர்வாக Accelerating Drug Discovery pipelines with AI and computational Approaches TOOTY தலைப்பில் Scinicorn labs நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் முனைவர் ஏ. ரொனால்டோ அனுஃப் உரையாற்றினார்.
ஆசிரியர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் இத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி தொடர்ந்து அய்ந்து நாட்கள் நடைபெற்றது. இதனை மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். சகிலா பானு, முனைவர் சி. விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் ஆர். ஷக்தி. கே. ரெத்தினா, என். கீர்த்தனா, வி.திவ்யஜோதி, ஏ. ஷெரன் செல்சியா ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இதில் தமிழ்நாட்டிலுள்ள 24 மருந்தியல் கல்வி நிறுவனங்களிலிருந்து 67 பேராசிரியர்களும் தமிழ் நாடு அல்லாத 8 பிற மாநிலங்களிலிருந்து 22 பேராசிரியர்களும் சவுதி அரேபியாவிலிருந்து 1 பேராசிரியரும் மொத்தம் 90 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.