சென்னை, அக்.18 ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆணையம் அமைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர கொள்கை முடிவு எடுத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.