‘பெரியார் உலகம்’ நிதி வழங்குவதற்காக பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அன்போடு வரவேற்றார். இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் நிழற்படத்தின் பிரதியை மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அந்தப் படம் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வக அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தமிழர் தலைவர் முதலமைச்சருக்குக் காட்டினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா. (சென்னை, 18.10.2025)