இந்நாள் – அந்நாள்

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாள் (18.10.1929)

மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட நீதிக்கட்சி கொண்டுவந்த அடிப்படை கட்டமைப்புகளில் முக்கியமானது . 1929ஆம் ஆண்டில் (18.10.1929) நீதிக்கட்சி ஆட்சியில்  (சட்டமன்ற சட்டம் மூலம்) அரசுப்பணியாளர் தேர் வாணையம்  அமைக்கப்பட்டதாகும்.

இது  மெட்ராஸ் சேவை ஆணையம் (Madras Service Commission) என்றும் அழைக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் பொது தேர்வாணையம் ஆகும்.

அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததைச் சரிசெய்யவும், பல்வேறு சமூகத்தினருக்கும் சமூக நீதியை நிலைநாட்டவும் இந்த ஆணையத்தை அமைக்க நீதிக்கட்சி அரசு முனைந்தது.

இதற்கு முன்னதாக, 1924ஆம் ஆண்டில் பனகல்  அரசர் தலைமையிலான அமைச்சரவையால் (நீதிக்கட்சியின் அமைச்சரவை) பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Board) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த வாரியம்தான் 1929இல் பொதுச் சேவை ஆணையமாக மாற்றப்பட்டது.

ஆண்டு: 1929 மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டம் மூலம் இந்த ஆணையம் நிறுவப்பட்டது.

நீதிக்கட்சி  ஆட்சியின் கீழ், 1921ஆம் ஆண்டி லேயே வகுப்புவாரி ஒதுக்கீட்டை (Communal G.O.  அரசாணை எண் 613) அரசுப் பணிகளில் நடைமுறைப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு: 44%

பார்ப்பனர்களுக்கு: 16%

முகமதியர்களுக்கு: 16%

ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு: 16%

பட்டியல் இனத்தவர்களுக்கு: 8%

இந்த ஒதுக்கீட்டு முறையைச் சரியாகச் செயல்படுத் தவும், அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைத் திறமை,  சமூகப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படை யில் நியமிக்கவும் ஒரு நிரந்தரமான, சுதந்திரமான ஆணை யத்தின் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாகவே, பணியாளர் தேர்வு வாரியம் விரிவுபடுத்தப்பட்டு 1929இல் பொதுச் சேவை ஆணையமாக மாற்றப்பட்டது.

இந்தச் செயல்பாடு, அரசுப் பணியிடங்களில் சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் நீதிக்கட்சி ஆற்றிய முன்னோடிப் பணிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது

இன்றளவும் வட இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத மக்களில் பெரும்பான்மையினர் அரசுப்பணிகள் இல்லாமல் உயர்ஜாதியினரின் வஞ்சக சூழ்ச்சிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் 1929 ஆம் ஆண்டே அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அமைத்து சமூக நீதியை உறுதிபடுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *