புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது வலி நிறைந்தது என்பதால் அதற்கு பதிலாக விஷ ஊசி மூலமோ அல்லது விஷ வாயு, மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும் என ரிஷி மல்கோத்ரா என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று (15.10.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷஊசிக்கு ஒன்றிய அரசு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.