15.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், புத்தாக்கத்துக்கான உத்வேகம், கிராம, நகர வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் திட்டக்குழு துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அளித்தனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா 42 சதவீத ஓ.பி.சி., இட ஒதுக்கீடு மசோதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரேவந்த் அரசு மனு தாக்கல்.
தி இந்து:
* டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் உரிமையில் தலையிடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது. சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
* டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
* காணொலி உட்பட உண்மை ஆதாரங்களை வழங்குவது தானாகவே விசாரணையை பாதிக்கக்கூடாது. இது ஒரு காலத்தில் நீதிமன்றத்தால் ஒன்றிய அரசின் கூண்டு கிளி என்று விவரிக்கப்பட்ட சிபிஅய்க்கு வழக்கை மாற்றுவதற்கு இது மிகவும் பலவீனமான காரணமாகும் என்கிறது தலையங்கம்.
* ஹிந்து மகாசபையின் தமிழ்நாடு தலைவர் ‘கோடம்பாக்கம் சிறீ’, போக்சோ சட்டத்தின் கீழ் கைது; 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திராவிட மாடல் அரசின் ‘காலை உணவுத் திட்டம்’:பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது, மேலும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர்களின் மருத்துவமனை வருகை கிராமப்புறங்களில் 68% மற்றும் நகர்ப்புறங்களில் 80% குறைந்துள்ளது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இங்கிலாந்தில் தெரிவித்தார்.
– குடந்தை கருணா