டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் மற்றும் நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு கல்வி முறை தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின் அடித்தளம் என்றும் பெரு நாட்டின் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சிலி பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைக்கு தடை? அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மைதானங்கள், பூங்காக்கள், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள், தொல்பொருள் துறை இடங்கள் உட்பட, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயின் வேண்டுகோளை ஏற்று, நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செயலருக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு.
தி இந்து:
* பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை நீக்குவதற்கான மூன்று மசோதாக்களை 30 நாட்களுக்கு மறுஆய்வு செய்யும் கூட்டுக் குழுவில் சேரலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க கூட்டணியின் (இந்தியா) தொகுதி உறுப்பினர்களைக் காங்கிரஸ் தொடர்பு கொண்டுள்ளது.
* தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஅய்) சட்டத்தை நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. “தரவு கிடைக்கவில்லை” என்ற ஒரு கோட்பாட்டை மோடி அரசு பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ பதிவில் கண்டனம்.
* உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.க்கள்) 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உயர் நீதிமன்றத்தின் அண்மைக்கால முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை (SLP) தாக்கல் செய்ய தெலங்கானா அரசு முடிவு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கான ‘கிரிமிலேயர்’ வருமான உச்ச வரம்பை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மோடி அரசு திட்டவட்டம். கடைசியாக ₹6 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக செப்டம்பர் 2017 இல் திருத்தப்பட்டது
– குடந்தை கருணா