பிஜேபியின் ‘ஹிந்துத்துவா’ இதுதான்! பார்ப்பனரின் காலைக் கழுவி அந்த நீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டாமோ, அக்.13 மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பார்ப்பன இளைஞரின் கால்களைக் கழுவி அந்த தண்ணீரை குடிக்க கட்டாயப் படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சத்தாரியா கிராமத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக் கப்பட்டிருந்தது. இருப்பினும், பார்ப்பனரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டபோது, கிராம கூட்டத்தில் அவருக்குப் ரூ.2,100 அபராதம் விதித்தனர். அன்னு பாண்டே இதை ஏற்றுக் கொண்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் குஷ்வா ஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு படத்தை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய போதும், இது பார்ப்பன சமூகத் தினருக்கு இழைக்கப்பட்ட அவ மானம் என்று சிலர் கருதினர்.

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்று கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்கு தண்டனை பெற வேண்டும் செய்ய வேண்டும் என்று கோரியது.

இதன் விளைவாக, புர்ஷோத் தம் அன்னு பாண்டேயின் கால்களைக் கழுவி, அந்த நீரை அருந்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், அவர் ரூ.5,100 அப ராதம் செலுத்தி பார்ப்ப சமூகத் திடம் மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

வேகமாகப் பரவும் வரும் காணொளியில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னு வின் கால்களைக் கழுவுவது பதிவாகியுள்ளது.

இருப்பினும் இதை எளிதாக கேட்டுக்கொண்ட புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்

ஆனால் இந்தச் சம்பவம் குறித்து புர்ஷோத்தம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *