ரயில்வேயில் கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை, அக்.12- இந்திய ரயில்வே யில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CEN 04/2025 பணி: Section Controller காலியிடங்கள்: 368  ஊதியம் மாதம் ரூ.35,400, 1.1.2026 தேதியின்படி பொதுப்பிரிவினர் 20 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும். ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் பட்டப் படிப்பு தரத்தில் Reasoning, Analytical and Mathematical Capability, Logical Capability பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், மேனாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ரூ.250 செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினர்களும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்த வேண்டும்.  www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *